செவ்வாய் / பூமி இடையிலான தொடர்பு ?

செவ்வாய் / பூமி இடையிலான தொடர்பு ?
Jun 3, 2017

மற்ற கிரகங்களில் உயிர்கள் வாழ வழி இருக்கிறதா என்பது பற்றி பேசும்போது, சிலர் நம் சொந்த சூரியக் குடும்பத்திலேயே அதற்கான ஆதாரம் இருக்கிறது என்கின்றனர். செவ்வாயில் உயிர்கள் வாழ்கின்றன என்றும் நாசா அதனை மறைப்பதாகவும் சில சதி கோட்பாட்டாளர்கள் கருதுகிறார்கள்.

செவ்வாய் கிரகம் சம்பந்தமான பல புகைப்படங்கள் அங்கே வேறு உயிர்களின் நாகரிகம் இருந்ததா என்ற கேள்வியை எழுப்புகின்றன.  இந்த புகைப்படங்களையும் சதி கோட்பாடுகளையும்  புறக்கணிக்க வேண்டும் என்று  விஞ்ஞானிகள் கூறினாலும், செவ்வாய் கிரகத்தின்  காந்தப்புலம் மறைவதற்கு முன்பு, அதன் மேற்பரப்பில் திரவப்  பெருங்கடல்கள் ஒருகாலத்தில் இருந்ததாக  ஒப்புக் கொண்டுள்ளனர். முன்பொரு காலத்தில் உயிர்கள் அங்கே வாழ்ந்தனவா ? செவ்வாய் கிரகத்தில் தற்போது கியூரியோசிடி ப்ரொபினால் நடத்தப்படும் ஆய்வுகள் பெரும்பாலும் இதற்கான விடையைத் தேடியே அமைக்கப்பட்டுள்ளன.