கனடா - பிரிட்டிஷ் கொலம்பியாவில் 180 இடங்களில் பயங்கர காட்டுத்தீ

கனடா - பிரிட்டிஷ் கொலம்பியாவில் 180 இடங்களில் பயங்கர காட்டுத்தீ
Jul 10, 2017

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 180 இடங்களில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால், 7 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீ அந்த மாகாணத்தின் 180 இடங்களில் பரவி உள்ளது. மேலும், காற்று பலமாக வீசுவதால் தீ காட்டுப்பகுதியையொட்டி உள்ள 20–க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த 7 ஆயிரம் பேர் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் தண்ணீர் தெளிக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று அந்நாட்டின் வானிலை இலாகா அறிவித்து இருக்கிறது. இது அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தி இருக்கிறது.

காட்டுத்தீ பரவியதையொட்டி பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் 14 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.