ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி: இந்தியா அரை இறுதிக்கு தகுதி பெற்றது

Jun 11, 2017

ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபிக்கான போட்டிகளில் இன்று இந்தியா, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரை இறுதிக்குச் செல்ல தகுதி பெற்றது.
டாசில் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்த நிலையில் 191 ரன்களில் ஆல்அவுட்டானது தென் ஆப்பிரிக்கா. இதையடுத்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்கோடு இந்திய அணி ஆடியது. இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்தியா 192 ரன்கள் இலக்கை 38 ஓவர்களிலேயே எளிதாகக் கடந்தது.
ஷிகர் தவான் 78 ரன், விராட் கோலி 76 ரன்களுடனும், யுவராஜ் 23 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் நின்றனர். யுவராஜ் இமாலய சிக்சருடன் போட்டியை முடித்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 15 அன்று நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.

