அமர்நாத் புனித யாத்திரை சென்றவர்களில் 6 பேர் மரணம்

அமர்நாத் புனித யாத்திரை சென்றவர்களில் 6 பேர் மரணம்
Jul 5, 2017
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்.
40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும். அவ்வகையில் இந்த ஆண்டின் யாத்திரை கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கியது.  ஆகஸ்ட் 7-ம் தேதியுடன் இந்த யாத்திரை நிறைவடையும்.  இதுவரை 70,000 பேர் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
இந்நிலையில்  கடந்த சனிக்கிழமை அன்று  3,880 மீட்டர் உயரத்தில் பயணம் மேற்கொண்ட போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பக்தர் சண்டேர் ஷாகர் (வயது73)  திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.  அதே போன்று உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சிவா காந்த் மிஸ்ரா (வயது59), என்பரும் உயிரிழந்தார்.  இருவரின் உடல்களும் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  அமர்நாத் யாத்திரையில் பலியாகும் பக்தர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.